- எமது பிரதேச பாடசாலைக் கல்வி மற்றும் முன்பள்ளி அபிவிருத்திக்கு ஆதரவாக செயற்படல்.
- சிறுவர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் பாதுகாப்பு.
- எமது பிரதேச மக்களின் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தலும் சமூகப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தலும்.
- பரிந்துரைப்பு நடவடிக்கைகள் மூலம் உள்ளக அபிவிருத்தியை ஏட்படுத்தல்.
- சுற்றுச் சூழல் பாதுகாப்பும் அனர்த்தகால நடவடிக்கைகளும்.
என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன்படி அவ்வப்போது சில செயற்பாடுகளை மேட்கொண்டு வருகின்றது.
முகாமைத்துவ குழு
"ஒருங்கிணைந்த
சமூக மேம்பாட்டு மையம்" ஆனா கொய்சா அமைப்பில் செயற்படுகின்ற தன்னார்வ
தொண்டர்கள் இணைந்து முகாமைத்துவ குழுவாக செயற்படுகின்றனர். இவர்கள்
அனைவரும் தத்தமது பணிகளுக்கு மத்தியிலும் எமது சமூக நலன் கருதிய
செயற்பாடுகளில் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிகழ்வுகள்
தொடர்பாக முன் வைக்கப்படுகின்ற கருத்துக்கள் ஆராயப்பட்டு ஒரு பொது
தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுவே குழுவின் இறுதித் தீர்மானமாகவும்
இருக்கும் என்பது ஒரு முக்கிய விடயமாகும்.