Wednesday, July 19, 2017

நிறுவன பின்னணியும் முகாமைத்துவ குழுவும்

"ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு மையம்" (COISA) ஆனது ஒரு அரச சார்பற்ற அமைப்பாக செயட்பட்டு வருகின்றது. இதன் பிரதான செயற்பாடுகளாக;
  • எமது பிரதேச பாடசாலைக் கல்வி மற்றும் முன்பள்ளி அபிவிருத்திக்கு ஆதரவாக செயற்படல்.
  • சிறுவர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் பாதுகாப்பு.
  • எமது பிரதேச மக்களின் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தலும் சமூகப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தலும்.
  • பரிந்துரைப்பு நடவடிக்கைகள் மூலம் உள்ளக அபிவிருத்தியை ஏட்படுத்தல்.
  • சுற்றுச் சூழல் பாதுகாப்பும் அர்த்தகால நடவடிக்கைகளும்.

என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன்படி அவ்வப்போது சில செயற்பாடுகளை மேட்கொண்டு வருகின்றது.

முகாமைத்துவ குழு

"ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு மையம்" ஆனா கொய்சா அமைப்பில் செயற்படுகின்ற தன்னார்வ தொண்டர்கள் இணைந்து முகாமைத்துவ குழுவாக செயற்படுகின்றனர். இவர்கள் அனைவரும் தத்தமது பணிகளுக்கு மத்தியிலும் எமது சமூக நலன் கருதிய செயற்பாடுகளில் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிகழ்வுகள் தொடர்பாக முன் வைக்கப்படுகின்ற கருத்துக்கள் ஆராயப்பட்டு ஒரு பொது தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுவே குழுவின் இறுதித் தீர்மானமாகவும் இருக்கும் என்பது ஒரு முக்கிய விடயமாகும்.

"திறமைக்கு பாராட்டு" நிகழ்வு











 

பல்கலைக்கழகத்திட்கு சென்ற மாணவர்களையும் மற்றும் க.பொ.த உயர்தரக் கல்வியை கட்பதட்கு தகுதி பெற்ற மாணவர்களையும் அவர்களது பெறுபேறுகளுக்கு காரணமாயிருந்த ஆசிரியர்களையும் பெற்றார்கள் , அதிதிகள் முன்னிலையில் பாராட்டுகின்ற நிகழ்வாக "திறமைக்கு பாராட்டு" எனும் நிகழ்வு நடைபெற்றது.

இடம் : கமு/திகோ/மெதடிஸ்த  தமிழ் மகா வித்தியாலயம்  பொத்துவில்
காலம் : 02.07.2017(காலை 9.00) 


அனுசரணையாளர்கள் 
  1. பெருமாள் பார்த்தீபன்
  2. நடராசா கார்த்தீபன் 
  3. சத்தியநாதன் தயாநாதன்
  4. சபாபதி பரம்சோதி
  5. நல்லதம்பி இந்திரா 
  6. சின்னத்துரை தூயவன் 
  7. சபாபதி செல்வஜோதி 
  8. கணபதிமுத்து செல்லத்தம்பி
  9. கிருஷ்ணபிள்ளை நிலோஜன்

அதிதிகள்

  1. பொத்துவில் பிரதேச செயலாளர்
  2. திருக்கோவில் வலய கல்விப் பணிப்பாளர்
  3. அமைப்பின் ஆலோசகரும் எமது பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலய தற்போதைய அதிபர்
  4. முன்னைநாள் அதிபர்கள்
  5. அயல் பாடசாலை அதிபர்கள்
  6. ஆசிரியர்கள்
  7. பொத்துவில் பிரதேச சிவமானிட ஒன்றிய இணைப்பாளர்
  8. பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் 
நன்றிகள்
இந் நிகழ்வில் திட்டமிடல் மற்றும் அமுல்படுத்தலில் எமது குழுவினால் சில அசெளகரியங்கள் ஏட்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றினை பொருட்படுத்தாது இந் நிகழ்வினை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு மூல காரணமாயிருந்த அனுசரணையாளர்கள் அனைவருக்கும் மற்றும் எமக்கான தகவல்கள் கருத்துக்கள் மற்றும் மண்டப ஒழுங்கு உட்பட நடனக் குழுவினரையும் தந்துதவிய எமது வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மற்றும் எமது நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகள் அனைவருக்கும் நிகழ்வினை சிறப்பித்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எமது "கொய்சா" அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.